நாங்கள் மனித மாண்பு காக்கவும், சுயமரியாதைக் காக்கவும் போராடுகிறோம்.மனிதனை ஒரு முழு மனிதனாக மாற்றுவதற்காக நங்கள் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.
இந்த பத்திரிக்கையாளர்கள், கடந்த நாற்ப்பது ஆண்டுகளாக என்னை வதைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இது வரை என்னை எவ்வளவு மோசமாக சித்தரிக்கிறார்கள் தெரியுமா?அவர்கள் இனியாவது இந்த முட்டாள் தனத்தை கைவிட்டு, நேர்மையுடன் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
பௌத்தம் தழுவிய பிறகு நான் அனைத்து அரசியல் உரிமைகளையும் உங்களுக்கு பெற்றுத்தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். என்னுடைய மறைவுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. இந்த இயக்கத்திற்காக நாம் கூடுதலாகப் போராட வேண்டும். பௌத்தம் துழுவிய பிறகு ஏற்ப்படும் இன்னல்களை, எப்படித் தீர்ப்பது என்பது குறித்து நான் உங்களுக்குச் சொல்கிறேன். இதை எதிர்கொள்வதற்கு என்ன விதமான முயற்சிகளை செய்ய வேண்டும் என்பதை குதித்தும் நான் முழுமையாக சிந்தித்து விட்டேன். என்னிடம் ஏராளமான தீர்வுகள் உள்ளன. நான் எம் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவேன். என்னிடம் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். எனக்கு ஏ\திரான பிராசாரத்தில் எந்த உண்மையும் இல்லை.
ஒரு விசயத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன் எங்கு பார்த்தாலும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால், நான் ஏன் பௌத்தம் தழுவினேன் ஒருவர் கூட கேட்கவில்லை. நான் ஏன் இந்த மதத்தை தவிர வேறு மதத்தை தழுவவில்லை என்று எவரும் கேட்கவில்லை. இந்த முக்கிய அடிப்படை கேள்விதான் மதமாற்ற இயக்கத்திற்கு அடிப்படையான கேள்வியாகும் மதம் மாறும் போது, அது பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட வேண்டும். எந்த மதம், ஏன் அது தழுவப்பட வேண்டும்?
1935 ஆம் ஆண்டு லயோலாவில் இந்து மதத்தை விட்டொழிப்பதற்க்காக ஓர் இயக்கத்தை தொடங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
நீங்க நாட்களுக்கு முன்பே நான் கூறினேன். “நான் இந்துவாக பிறந்தாலும் ஒரு போதும் இந்துவாக சாக மாட்டேன்” நேற்று அதை நிரூபித்தும் காட்டினேன். நான் தற்பொழுது மிகுந்த மகிழ்ச்சியில் தலைத்திருக்கிறேன். நான் ஒரு கொடூரத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன். எனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவை இல்லை. பௌத்தத்தை விரும்புகிறவர்கள், அதை, தழுவ விரும்புகிறவர்கள் அதை முழுமையாக ஏற்றுகொள்ள வேண்டும். அவர்களின் உள்ளுணர்வு அந்த மதத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.
மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மதம் இன்றியமையாததாகிறது. எனக்குத் தெரியும் ஒரு பிரிவினர் காரல் மார்க்சை படித்த பிறகு, மதம் தேவையற்றது என்று கருகிறார்கள். அவர்களுக்கு மதத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை. அவர்கள் காலையில் எழுந்து காலை உணவை சாப்பிட்டு, கேலிக்கைகளில் பொழுதை கழிப்பதில் அவர்களின் நாள் முடிவடைகிறது.
இது தான் அவர்களுடைய கொள்கை என்னுடைய கொள்கை அதுவல்ல. என்னுடைய தந்தை ஏழை எனக்கு அத்தகைய வசதிகள் கிடையாது. நான் என்னுடைய வாழ்க்கையில் துன்புற்றதைப் போல் யாரும் துன்புற்றுருக்க முடியாது. எனவே, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வசதிகள் இல்லை என்றால், அவன் எவ்வளவு துன்பப்படுவான் என்பதை என்னால் உணர முடியும். பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு இயக்கம் தேவை என்பதை நான் அறிவேன். நான் அந்த இயக்கத்திற்கு எதிரானவன் அல்ல.. மனிதன் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.
ஆனால், இவ்விசயத்தில் நான் ஒரு முக்கிய வேறுப்பாட்டைக் காண்கிறேன். எருமை மாட்டிருக்கும் மனிதனுக்கும். வேறுபாடு உண்டு. எருமை மாட்டிருக்கு தினமும் புண்ணாக்கு தேவை மனிதனுக்கு உணவு தேவை. ஆஅனால், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன வெனில், எருமைக்கு அறிவு இல்லை. மனிதனுக்கு உடலும் அறிவும் இருக்கிறது. எனவே, இவை இரண்டும் குறித்து அவன் சிந்திக்க வேண்டும். அவனுடைய அறிவு பண்படுத்தப்பட வேண்டும்.
மனிதனுக்கும் பண்படுத்தப்பட்ட மனிதனுக்கும் உணவை தவிர வேறு எந்த உறவும் இல்லை என்று நினைக்கும் மக்களுடனும் நாட்டுடனும் உறவு வைத்துக்கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. மக்களோடு உறவு வைத்துக் கொள்ள மனிதனுக்கு நல்ல உடலும், அந்த உடலைப் பேணுவதற்கு அறிவையும் பண்படுத்த வேண்டு. இல்லையெனில் மனித இனம் முன்னேரியதாகச் சொல்ல முடியாது.
ஒரு மனிதன் உடல் அல்லது மனம் ஏன் பாதிக்கப்படுகிறது? ஒன்று அவன் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவன் மனது புத்துணர்ச்சி இன்றி இருக்க வேண்டும். மனதில் புத்துணர்ச்சி இல்லையெனில், அங்கு முன்னேற்றம் இருக்க முடியாது. அவனுக்கு ஏன் புத்துணர்ச்சி இல்லை. இதற்கான முதற்காரணம், மனிதன் எந்த வாய்ப்புகளும் வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறான் அல்லது அவன் முன்னேற எந்தவித நம்பிக்கையும் இன்றி வைக்கப்படிருக்கிறான். இத்தகு சூழலில், அவன் எப்படித் புத்துணர்வோடு உழைப்புக்குரிய பயன் கிட்டும் போதுதான் அவன் புத்துணர்வு பெறுகிறான்.
பாபாசாகேப் அம்பேகர் (நூல்: நான் இந்துவாக சாக மாட்டேன். பக்கம் : 6)

No comments:
Post a Comment