என்னுடைய பெளத்த சகோதரர்களே நேற்றும் இன்றும் காலையும் மத மாற்ற (தீக்ஷா) நிகஹ்வு நடைபெற்ற இடத்தின் முக்கியத்துவதை சிந்தனையாளர்கள் புரிந்து கொள்வது
ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரியா சுவயம் சேவாக் சங்) நாக்பூரில் மையம் கொண்டிருப்பதால் அவர்களை நெருக்கடிக்கு ஆட்படுத்தும் வகையில், இது இங்கு நடத்தப்படுவதாக சிலர் கூறினார்கள். இதில் துளியும் உண்மை இல்லை. நாம் எடுத்துக்கொண்ட பனி மிகப்பெரியது. நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் இதற்க்காகப் போதவில்லை. எனவே, மற்றவர்களை சீண்டிப்பார்க்க எனக்கு நேரம் இல்லை. இந்த இடத்தை தேர்வு செய்வற்கு வேறு ஒரு காரணம் உண்டு. இந்தியாவில் பௌத்தம் பரப்பியவர்களில் நாகர்களே என்பது பெளத்த வரலாறு படித்தவர்களுக்கு தெரிந்து இருக்கும. ஆரியர்களை கடுமையாக எதிர்த்தவர்களும் நாகர்களே.
ஆரியர்களுக்கும் ஆரியர் அல்லவதர்க்கும் பல கடுமையான சண்டைகள் நடைபெற்றன. .புராணங்களில் ஆரியர்கள் நாகர்களை எரிந்து கொன்றதற்கு, எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.
பல்வேறு காரணங்களுக்காக நாம் அவர்களை (ஆர்.எஸ்.எஸ்) எதிர்க்கலாம். ஆனால், இந்த இடத்தை தேர்வு செய்யதர்க்கான நோக்கம் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு அல்ல. இப்பெரும் பணியை நான் மேற்கொண்டதற்க்காக பல்வேறு மக்களும் பத்திரிகைகளும் என்னை விமர்சிக்கின்றனர். சில விமர்சனங்கள் கடுமையானதாக இருக்கிறது.
நான் ஏழை தீண்டப்படாத மக்களை தவறான பாதைக்கு அழைத்து செய்வதாக அவர்கள் கருதுகிறார்கள். மதமாற்றத்தால் அவர்களின் உரிமைகளை அவர்கள் இழக்க நேரிடும் என்று நம்முடைய சமுகத்தை சேர்ந்த மக்களே தவறான பிரசாரங்களை செய்கிறார்கள். நம்மில் படிப்பறிவில்லாத மக்களை பழைய பழகவழக்கங்களையே பின்பற்றும்படி அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
கடந்த காலங்களில் நாம் இறைச்சி உண்ணுதல் கூடாது என்பதர்க்க்கவே ஓர் இயக்கம் இருந்தது. தீண்டதகுந்தவர்கள் எருமை மாட்டின் பாலை குடிப்பார்கள். ஆனால், அந்த எருமை இறந்துவிட்டால் அதை நாம் சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டுமாம். இது, கேலிகூத்தாக இல்லையா?
“கேசரி” என்ற பத்திரிகையில் முன்பு ஒரு முறை “சில கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் 50 மாடுகள் இறப்பதாகவும் அந்த மாட்டினுடைய கொம்பு, இறைச்சி, எழும்பு மற்றும் வால் பகுதியை விற்பதன் மூலம் தீண்டப்படாத மக்கள் ஐநூறு ரூபாய் சம்பாதிக்க முடியும்” என்றும் எழுதியிருந்தன்ர்.
ஒரு முறை நான் சங்கம் நேர் என்ற ஊருக்கு ஒரு கூட்டத்திதிற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது “கேசரி” பத்திரிக்கையின் செய்தியாளர் ஒரு சீட்டை கொடுத்து கேட்டார்: நீங்கள் உங்கள் மக்களை செத்த மிருகங்களை சுமக்க வேண்டாம்னு அறிவுத்துகிறீர்கள் அவர்கள் எவ்வளவு ஏழ்மையில் உழலுகிறார்கள்! அவர்களுடைய பெண்களுக்கு உடுத்த புடவையோ, அறிந்து கொள்ள “ஜாகேட்டோ” கூட இல்லை. அவர்களுக்கு உணவு இல்லை, நிலம் இல்லை. இவ்வளவு அவலமான நிலையில் வாழும் இம்மக்கள், செத்த மாட்டைத் தூக்கி அதன் மூலம் ஐந்நூறு ரூபாய் சம்பாதிப்பதை மறுக்கின்றீர்களே! இது உங்கள் மக்களுக்கு மாபெரும் இழப்பில்லையா?
நான் அவரைக் கேட்டேன் உங்களுக்கு எத்தனை குழைந்தைகள்? நீங்கள் மொத்தம் எவ்வளவு பேர்? “எனக்கு ஐந்து குழந்தைகள்” என்றும் “என்னுடைய அண்ணனு\க்கு ஏழு குழந்தைகள்” என்றும் அவர் பதில் பதிலளித்தார். நான் சொன்னேன்: அப்படி எனில் உங்கள் குடும்பம் மிகப்பெரியது. எனவே, நீங்களும் உங்கள் உறவினர்களும் இந்த கிராமத்தில் செத்து போகும் அனைத்து மிருகங்களையும் சுமது செல்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஐந்நூறு ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். நானும் ஒரு ஐநூறு ரூபாய் உங்களுக்கு தருகிறேன். என்னுடைய மக்கள் உணவிற்கும் உடைக்கும் என்ன செய்வார்கள் என்பதை நான் பார்த்து கொள்கிறேன். ஆனால், நீங்கள், ஏன் இதை செய்யக்கூடாது. நீங்கள் இதை செய்வதால், அது உங்களுக்கு மிருந்த பயனை அளிக்குமல்லவா? எனவே, செத்த மிருகங்களை இனி நீங்கள் தூக்குங்கள். என்று.
ஒரு பார்ப்பன சிறுவன் நேற்று என்னிடம் வந்து கேட்டான் உங்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் இடவொதுக்கீடு அளிக்கப்படுகிறதே. அதை, ஏன் நீங்கள் கைவிடுகிறீர்கள்? நான் சொன்னேன், நீ” மகர்” களாக மாறி நாடாளுமன்ற சட்டப் பேரவைகளில் உள்ள இடங்களைக் கைப்பற்றி கொள். பார்ப்பார்கள் இட ஒதுக்கீடை பயன்படுத்த்கொள்வதற்காக, ஏன்,”மகர்” களாக மாற மறுக்கிறீர்கள்? என்று.
நான் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இது தான் :எங்களுடைய இழப்பிற்காக நீங்கள் ஏன்கண்ணீர் விடுகிறீர்கள்? உண்மையில் ஒரு மனிதர்க்கு சுயமரியாதை தான் தேவையா ஒழிய, போருலாதாரப்பயன்கள் அல்ல..
- அண்ணல் அம்பேத்கர் (இந்துவாக சாக மாட்டேன் பக்கம் 3)
அறிவர் பாதை தளத்திற்கு வந்தமைக்கு நனறிகள்

No comments:
Post a Comment