என் மீது நீங்கள் கொண்ட பற்றுறுதி சந்தேகத்திற்கே இடமில்லாதது என்பது எனக்கு தெரியும். அதை நீங்கள் வெளிப்படுத்துவது தேவையில்லாதது
. என்று நான் நினைக்கலாம். அதனை ஏற்றுகொள்ள வேண்டுமென்று நீங்கள் வற்ப்புறுத்துவதனால், நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு, பிரிவு ஆகிய உணவ்ர்வுகளின் அடையாளமாக நான் அதனை வரவேற்கிறேன். தீண்ட்ப்படாதோருக்கு நான் ஆற்றியபணிக்கு, பாராட்டின் அடையாளம் அது. இந்தியாவிலுள்ள தீண்டப்படாதோரின் பெயரால், இந்திய அரசியலில் நான் எடுத்துள்ள நிலைப்பாட்டை நீங்கள் ஆதரிக்கிரீகள் என்பதை உங்களின் வெளிப்பாடு நிரூபிக்கிறது.இந்த நாட்டின்
அரசாங்கத்தை நடத்துவதில் இந்துக்களோடும் முஸ்லீம்களோடும் மரியாதைக்குரிய கூட்டாளிகளாக
– சரி சமமான மரியாதைக்குரிய நிபந்தனையோடு கூடிய கூட்டாளிகளாக அங்கீகரிப்பட
வேண்டும் என்பது நமது குறிக்கோளாகும். நமக்கு முன் நாம் நிர்ணயித்துள்ள இந்த
குறிக்கோளை கண்டிப்பாக அடைய முயற்சிப்பேன் என்று உரிய்தி கூறுகிறேன்.
இந்த குறிக்கோளை அடைய
நான் போராடுவேன் என்பதில் என் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டு. நான் உங்களிடமிருந்து
ஒரு உறுதியை அதிகமாக எதிர்ப்பார்க்கிறேன். உங்களுக்கு அன்பும் பரிவும் எனக்கு
உண்டு என்று உறுதியளித்திருக்கிறீர்கள். அது தேவையற்றது நான் வேறு வகையான உறுதியை
வேண்டுகிறேன்.
ஒற்றுமை, நமது
உரிமைகளுக்காக நிற்கும் உறுதி, நமது உரிமைகளுக்காக
போராடுதல், நமது உரிமையகளை வென்றுறெடுக்கும் வரை திரும்பி பாராதிருத்தல்
ஆகிய உறுதிகள்.
உங்கள் பங்கினை செய்ய
நீங்கள் உறுதி கொடுங்கள் என் பங்கினை செய்ய நான் உறுதி கொடுக்கிறேன்.
நீதி நம் பக்கம்
இருப்பதால் நமது போரில் தோல்வியடைய வாய்ப்புஇல்லை, போராட்டமானது
முற்றிலுமாக அகநிலை சார்ந்தது. அதில் பருபொருள் சார்போ, இழிவோ எதுவும்
இல்லை. ஏனெனில், நமது போராட்டம் செல்வத்திற்க்காகவோ அதிகாரத்திர்க்ககவோ அல்ல. இது
விடுதலைக்கான போராட்டம். இந்து சமூக அமைப்பினால் ஒடுக்கப்பட்டு சிதைக்கப்பட்ட மனித
பண்பியல்புகளை மீட்டேடுபதர்க்கான போராட்டம்.
இந்த அரசியல்
போராட்டதில் இந்துக்கள் வெற்றிபெற்றும் நாம் தோல்வியடைந்தால், ஒடுக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும்
தொடரும்.
கற்பி, கிளர்ச்சிசெய், ஒன்றுதிரட்டு,
உன்னிலேயே பற்றுக்கொள், நம்பிக்கை தளராதே என்பதே உங்களுக்கு எனது கடைசி அறிவுரை வார்த்தைகள்.
நீங்கள் என்னுடனேயே இருப்பிபீர்கள் என்று எனக்குத்தெரியும். நான் எப்போதும்
உங்களுடனேயே இருப்பேன்.”

No comments:
Post a Comment