Monday, July 13, 2020

புத்தரும் அவர் தம்மமும் PDF

;

பௌத்த சமயத்தை தழுவிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள், இந்தியாவில் பௌத்தத்தை நிலை நிறுத்துவதற்கு மூன்று விஷயங்களை செய்ய வேண்டுமென கருதியதாக கூறப்படுகிறது... அவை.. 1.கிறிஸ்தவர்களுக்கு பைபிள் இருப்பதைப்போல பௌத்தர்களுக்கு என்று தனியே ஒரு அறநூலை உருவாக்க வேண்டும்.. 2.இந்தியாவில் பௌத்தம் தழுவிய மக்களுக்கு உலக பௌத்த நாடுகளின் ஆதரவினை ஏற்படுத்தி தர வேண்டும்.. 3.இந்தியாவில் பௌத்தத்தை பரப்புவதற்கு பெரிய அளவில் பிக்குகள் அணியை உருவாக்கிட வேண்டும்.. இந்த மூன்று விஷயங்களில் முதல் விஷயமான பௌத்தர்களுக்கு என்று தனியே ஒரு அறநூலை உருவாக்கினார். அது புத்தரும் அவரது தம்மமும் என்று அழைக்கப்படுகிறது... இக்கால சமுதாய தலைவர்களாக அறியப்படும் சிலர், தற்போது பௌத்த சமயம் குறித்தும், அண்ணல் குறித்தும் சில விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.. அது, அண்ணல் பௌத்தர்களுக்கென்று தனியே ஒரு அறநூலை எழுதியதோடு மறைந்து விட்டார். மற்ற இரண்டு விஷயங்களான, பௌத்த நாடுகளின் ஆதரவைப் பெறுவது, பிக்குகளை உருவாக்குவது போன்ற பணிகளை அவர் செய்யவில்லை.. அதனால் அவரைப் பின் தொடர்ந்து பௌத்தம் தழுவிய மக்கள் நியோ புத்திஸ்டு என அழைக்கப்பட்டு, தற்போது அவர்கள் அட்டவணைச் சாதிகளில் ஒன்றாக சுருங்கிப் போய் விட்டார்கள் என அந்த விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.... இத்தகைய விமர்சனத்தை முன்வைப்பவர்கள், தலித் மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியேற வேண்டியது அவசியம்தான் என ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அதற்கு அண்ணல் தழுவிய பௌத்தம் ஏற்புடையதல்ல என்கிறார்கள்.. 60ஆண்டுகால அனுபவத்திலிருந்து பௌத்தம் இந்த மக்களுக்கு எந்த தீர்வையும் தரவில்லை என்றும், அதனால் பௌத்தம் தவிர்த்து வேறு ஏதாவது மாற்று வழியை யோசிக்க வேண்டும் என்று ஒரு புதிய விவாதத்தை துவக்குகிறார்கள்... இப்படிப்பட்ட கருத்துக்களை நாம் மேலோட்டமாக பார்க்கும் போது அவை மிகச் சரியானதாக தோன்றும். ஆனால் ஆழமாக பார்க்கும் போதுதான் அது பௌத்த எழுச்சியின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி என்பதை நம்மால் உணர முடியும்.. அண்ணல் எழுதிய புத்தரும் அவரது தம்மமும் என்கிற நூல் 1957-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தது. பிறகு இந்தியிலும், மராத்தியிலும் வெளிவந்தது. பௌத்தம் சுருங்கி போய்விட்டதாக விமர்சனம் செய்பவர்கள், அந்த நூலை தமிழாக்கம் செய்யவோ, அதை பதிப்பிக்கவோ அல்லது அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.. அந்த நூலை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்து லட்சக்கணக்கில் நூல்களை அச்சடித்து இலவசமாக விநியோகம் செய்து வருகிறது. ஆனாலும் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை இவர்கள் செய்யவில்லை.. பௌத்தம் தழுவிய இரண்டு மாத கால இடைவெளியில் ஐம்பது லட்சம் மக்களை பௌத்தம் தழுவச் செய்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். ஆனால் அண்ணலை விமர்சிக்கும் இவர்கள், இந்த 60 ஆண்டு அனுபவத்தில் பௌத்தத்தை தழுவவோ அதை வளர்த்தெடுக்கவோ எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை... உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவது, பிக்குகளை உருவாக்குவது போன்ற பணிகளை செய்யாமல் அம்பேத்கர் மறைந்து விட்டார் என்பது போன்ற விமர்சனத்தை வைப்பதின் மூலம் பௌத்தத்தை வளர்த்தெடுப்பதில் தங்களுடைய கடமையை வசதியாக மறந்து விடுகிறார்கள் அல்லது மறைத்து விடுகிறார்கள்.. இயேசுபிரானின் உன்னத கருத்துக்களை உலகமெங்கும் கொண்டு சென்றவர்கள், அவருடைய தன்னலமற்ற சீடர்கள்தான். ஆனால் இயேசுவிற்கு கிடைத்த சீடர்களைப் போல அம்பேத்கருக்கு கிடைக்க வில்லை. அது அம்பேத்கரின் குற்றமல்ல... இவர்கள் சொல்வது போல் பௌத்தம் குறித்த அனுபவமானது அம்பேத்கருக்கு பிறகான 60 ஆண்டுகள் அல்ல. அது இரண்டாயிரம் ஆண்டு அனுபவங்களைக் கொண்டது. தமிழ் மண்ணில் பௌத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் பௌத்த இலக்கியங்களை கொண்டும், சைவ வைணவ இலக்கியங்களைக் கொண்டும் நாம் அறிந்து கொள்ளலாம்... பார்ப்பனீயத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையேயான இடைவிடாதப் போரே இந்திய வரலாறு என அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்திய வரலாறு என்பது இரண்டாயிரம் ஆண்டுகளையும் தாண்டியது... இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த மண்ணில் ஏற்றத்தாழ்வை போதிக்கும் பார்ப்பனீயத்திற்கு எதிராக சமத்துவத்தை போதிக்கும் பௌத்தமே இருக்கும். ஏனெனில் அது சுயநலத்தை துறந்த புத்தனால் போதிக்கப்பட்டது..

பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும் நமோ புத்தா 

14 comments:

  1. I got it... Thank you so much sir...

    ReplyDelete
  2. உங்கள் பணி போற்றுதலுக்குறியது மேலும் பணி தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ, ஜெய் பீம்

      Delete
    2. எப்படி download செய்வது

      Delete
  3. Replies
    1. Linkகை click பண்ணுங்க.. உங்க mail id கேட்க்கும்.. கொடுங்க.. டௌன்லோடு பண்ணுங்க

      Delete
    2. எந்த link தோழர் ...

      Delete
  4. Brotheri cudnt able to find the link

    ReplyDelete
  5. kriships676@gmail.com I need this book .Tami

    ReplyDelete
  6. kriships676@gmail.com I need this book .Tami

    ReplyDelete

சமணர் கழுவேற்றம் pdf

சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில...