கருணை இல்லத்தில்
வாழும் கண்ணீர் துளிகள்
காம சுகத்தில்
கால் விரித்தவளுக்குத்
தெரிந்திருக்கப் போவதில்லை
கால் நீட்ட வழியின்றி
மண்டியிட்டே நீ உறங்குவது......
முந்தானை அவிழ்த்து
மோகப் பாய் விரித்து
கட்டிப் புரண்டவளுக்கு
புரிந்துருக்க வாய்ப்பில்லை
படுக்க பாயின்றி
போர்த்த வழியின்றி நீ
அடைபட்டுக் கிடப்பது சிறு
அட்டைப் பெட்டிக்குள் என்று!!!
கச்சை கழட்டியவள்
நினைத்திருக்கவே மாட்டாள்
சட்டை இல்லாமல்
தெருத்தெருவாய் நீ
அலைவாய் என்று!!!
இச்சையில் பசியாறி
வயிறு நிரப்பியவள்
அறிந்திருக்க வாய்ப்பேயில்லை
எச்சை இலைக்கு நீ
கையேந்திக் காத்திருப்பது....
மலரென்று எண்ணாமல்
மலமென்று தூக்கிக் குப்பையில்
போட்டவளுக்கு
எப்படித் தெரியும்
இந்த மழலைகளின் சோகம்...

No comments:
Post a Comment