அரசு ஓய்வூதியம் பெறுவோர், முதியோர், கைம்பெண், மாற்றுதிறனாளிகள் வாழ்வு சான்றிதழ் தாக்கல் செய்ய விலக்கு. அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்,
இது தொடர்பாக தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணை:-
இந்த ஆண்டுக்கான ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கான பட்டியலை தயாரிப்பதில் இருந்து விலக்களித்து கடந்த ஜூன் 29ஆம் தேதி அரசு ஆணை பிறப்பித்தது. இதில் மற்றொரு விளக்கத்தையும் அரசு தற்போது வெளியிடுகிறது.
அதன்படி, இந்த ஆண்டில் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் நேரில் ஆஜராகவும், வாழ்வுச் சான்றிதழை தாக்கல் செய்யவும் விலக்களித்து உத்தரவிடப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் பணியில் என்றென்றும்
இரா.கணேசன்
அருப்புக்கோட்டை
9443920595

No comments:
Post a Comment